முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை செல்வதற்கு வழிகாட்டும் விளக்க நுால். பாதயாத்திரையில் ஏற்பட்ட அருள் அனுபவத்தால் படைத்த, 36 பக்திப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
பாடல்கள் எழுதிய இடங்களும், தருணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆறு படை வீடுகளுக்கு சவால் நிறைந்த பாதயாத்திரை சென்று வர கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை எடுக்கும் என்கிறது. செருப்பு அணியாமல், 1,500 கி.மீ., பயணம் பற்றி விவரித்து பிரமிக்க வைக்கிறது.
நெடிய பாதயாத்திரையில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரவு தங்கிய இடமும் பட்டியலிடப்பட்டுள்ளது. அற்புதமான முருக பக்தரின், அதிசயமான ஆன்மிக பயண அனுபவ தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
– டாக்டர் கார்முகிலோன்