சங்க இலக்கியங்கள் கூறும் அறக்கோட்பாடுகள், அறவழி ஆட்சி, பண்பட்ட வாழ்வியல் கூறுகள், நட்பு நலம், சமுதாய நலம் கடமையுணர்வு, மனித மாண்புகள், நேர்மையான வணிக நோக்கு, இல்வாழ்க்கை, கல்விச் சிறப்பு பற்றி தக்க மேற்கோள்களுடன் விளக்கும் நுால்.
தன்னலம் நீக்கி, பொதுநல நோக்குடன் உழைக்கும் மாமனிதர்கள் வாழ்வதால் தான் இவ்வுலகம் நிலைத்திருக்கிறது என்பன போன்ற கருத்துகள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. அனைவருக்குமான கடமை உணர்வும், நாட்டுப்பற்றும் சங்க இலக்கியங்களில் பரக்கக் காண முடிகிறது.
குறுந்தொகைப் பாடல்களில் காணக் கிடக்கும் உவமைச் சிறப்பும், உணர்த்தும் பொருள் சிறப்பும் அழகுப்பட கூறப்பட்டுள்ளன. தமிழினம் தலைநிமிர்ந்து வாழ்ந்த வரலாற்றைப் பெருமிதத்தோடு பதிவு செய்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்