காணும் அழகெல்லாம் பச்சை புடவைக்காரியின் அழகாய் எழுத்தாளருக்கு தோன்றுகிறது. ரஞ்சனியின் கண்களை பார்த்து கன்னக்குழிகளை ரசிக்க நினைத்த எழுத்தாளர், தன்னை தொட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என நினைத்தது சுமாரான மால்யாவிடம் தான். ஒருவரின் திறமை தான் நிரந்தர முகவரி என்பதை மால்யாவுக்கு உணர்த்துவது போல, நமக்கும் உணர்த்துகிறார்.
ரஞ்சனியின் பெயரில் அன்னை பராசக்தி அவரை தட்டி எடுத்து பொன்னென வார்த்தைகளை எழுதத் துாண்டி ஜொலிக்க வைக்கிறார். சட்டென பார்க்கத் துாண்டும் அழகைப் போன்ற அடையாளம் தான் இயல்பான ஆடிட்டர் ஸ்ரீதரிடம் இருந்தது. இதயத்தை புரட்டி எழுத்துக்களை வார்த்து எடுத்து படிக்க கொடுக்கிறது.
காட்டாற்று வெள்ளம் கண்ணில் கண்டதை எல்லாம் அடித்து புரட்டி களைத்து சோர்ந்து, கடலில் நிதானமாக கலப்பது போல கதையோட்டம் அமைந்துள்ளது.
– எம்.எம்.ஜெ.,