பழைய கால நிகழ்வுகளை, இப்போதைய சூழலில் பொருத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குறுந்தொகை மற்றும் நற்றிணை பாடல், விளக்கங்கள், அவற்றின் மையக் கருவுக்கு ஏற்ப சிறுகதைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.
பணிக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார் காதலன். காதலியின் அலுவலக தோழியர், காதலனையும், வேறு பெண்ணையும் இணைத்து தவறாக சித்தரிக்கின்றனர். ஒரு கட்டத்தில், காதலனின் துாரத்து உறவு தங்கை தான் அவள் என தெரிந்து, தோழியர் வருந்துகின்றனர். ஆண், பெண் உறவுகளை தீர ஆராயாமல் எடை போடுவது தவறு என உணர்த்துகிறது இந்த கதை.
தாம்பத்திய வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தாது, காதல், அன்பை அதிகரிக்கச் செய்யும் என்ற உணர்வை வெளிப்படுத்துகிறது ஒரு கதை. பணக்கார காதலனுக்கும், ஏழை வீட்டு காதலிக்கும் இடையே, ஜாதியை எப்படி சாகடித்து, கைபிடித்தனர் என்பதை கூறுகிறது ஒரு கதை. ஒவ்வொரு சிறுகதைகளும் காதல், அன்பு, நட்பு, நாட்டு நடப்புகளை அலசுகிறது. கதை எழுத முயற்சிப்போருக்கு உதவும் நுால்.
–
டி.எஸ்.ராயன்