திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தை மையமாக்கி எழுதப்பட்ட நாவல் நுால். ஏழை, பணக்காரன், காதல், அமெரிக்க உயர் கல்வி, ஆய்வு, நட்பு என பல தளங்களில் பயணிக்கிறது.
இந்திய பண்பாடும் நாகரிகமும் கலாசாரமும் ஈர்க்க வைக்கிறது. இந்தியாவை சுற்றி பார்க்க வந்தவர், எதிர்பாராத விதமாக பெண்ணை சந்திக்கிறார். இப்படி பல தளங்களில் கதை புரண்டு ஓடுகிறது.
அமெரிக்க பயணம், மருத்துவர் உறவு, சுற்றுப்பயணம் என தொடர்கிறது. காதல் வென்றதா என்பதை விறுவிறுப்பாக்குகிறது. வழிபாட்டுத் தலங்கள், வரலாற்று இடங்கள், புண்ணிய நதிகளின் சிறப்பை நிரல்படுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்