ராணி மங்கம்மாள் பற்றி விவரித்துள்ள நுால். நாயக்க மன்னர்கள் மதுரையை ஆட்சி புரிந்த விதம் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விஜய நகரம் வீழ்ந்த பின், மதுரை நாயக்க மன்னர்கள் எழுச்சி பெற்ற தகவல்கள் கூறப்பட்டு உள்ளன. திருமலை நாயக்கரின் தேர்ந்த அரசியல், ஆட்சியின் சிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
லிங்கம நாயக்கரின் மகள் ராணி மங்கம்மாள் வீரம், விவேகத்துடன் வளர்ந்ததை விவரிக்கிறது. மதங்களில் சமநிலை பேணி, பிற மதத்தினருக்கும் தானம், காணிக்கை வழங்கியதை குறிப்பிடுகிறது. இறுதியில், பேரன் விஜயரங்கன் ஆட்சிக்கு வர, ராணி மங்கம்மாளை அறையிலே சிறை வைத்த தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராணி மங்கம்மாள் பற்றி அறிய உதவும் நுால்.
– முகில்குமரன்