முகப்பு » தமிழ்மொழி » பட்டினப்பாலை ஆராய்ச்சி

பட்டினப்பாலை ஆராய்ச்சி

விலைரூ.50

ஆசிரியர் : ஆர்.ராகவையங்கார்

வெளியீடு: செண்பகா பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

Rating

பிடித்தவை
பக்கம்: 102   

மிகச் சிறந்த ஆராய்ச்சி அறிஞரும் தமிழ், வட மொழி, ஆங்கில மொழிப் புலமை மிக்கவரும், செய்யுளியற்றல், உரைநடை வரைதல், துருவியாராய்தல், நிரல்படக் கோவை செய்தல், இனிய சொற்பொழிவாற்றுதல் என்று, பல்வேறு ஆற்றல் உடையவரும் ஆன, ராகவையங்கார் தமிழுலகம் போற்றும் மாமேதை. அவரது பழைய நூல் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டினப்பாலை, தமிழின் தொன்மை இலக்கியங்களான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும், புலவரால் பாடப் பெற்றது இந்நூல். இவர் தம் ஆய்வின்படி, பொருநராற்றுப் படைத் தலைவன் கரிகாலன் என்றும், பட்டினப்பாலைத் தலைவன் திருமாவளவன் என்றும் நாம் அறியமுடிகிறது. இருவரும், ஒருவர் அல்லர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் உரையை மறுத்தும் சிலவிடங்களில் துணிந்துரைக்கும் பாங்கு சிறப்பாக உள்ளது.புலவர் பெருமக்களும், ஆய்வு நாட்டம் உடையவர்களும் முன்னரே இந்நூல் கற்றவரும் கூட  மீண்டும் படித்துப் படித்துப் பயன் அடையத்தக்க நூல்.


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us