ஹிந்து சமய புனித நுாலான பகவத் கீதையை தமிழாக்கம் செய்து உருவாக்கப்பட்டுள்ள நுால்.
அர்ஜுனனுக்கு பகவான் கூறிய உபதேசமே பகவத் கீதை. வேத வியாசரால் அருளப்பட்ட மகாபாரதத்தில் உள்ள ஒரு பகுதியே அரும்பெருஞ்செல்வமாகிய பகவத் கீதை.
வடமொழி ஸ்லோகங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கவிதை வடிவில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அர்ஜுன விஷாத யோகம் முதல், மோட்ச சந்நியாச யோகம் வரை, 18 அத்தியாயங்களில் பாடல்களும், உரையாடல்களும் தரப்பட்டுள்ளன. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமான கீதையின் மேன்மை மிகுந்த கருத்து சாரத்தை இனிமை கலந்து தரும் நுால்.
– புலவர் சு.மதியழகன்