அந்தமானில் தமிழ் இலக்கிய தற்போதைய வளர்ச்சி நிலையை எடுத்துரைக்கும் நுால்.
அந்தமான் தீவில் தமிழர் குடியேற்றம், தகுதி நிலைகள் பற்றி அலசி ஆராய்கிறது. தமிழ் கல்விக்கான போராட்ட தகவல்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அந்தமான் தமிழர் சங்க தோற்றம், வளர்ச்சி சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வெளியான இதழ்கள் பற்றிய தகவல்களும் கொட்டிக் கிடக்கின்றன.
வானொலி நிகழ்ச்சிகளில் தமிழுக்கு உள்ள நிலை குறித்த கேள்வி சிந்திக்க துாண்டுகிறது. தமிழ்மொழி, அந்தமான் நிக்கோபார் தீவுகளுடன் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்புடையது என்பதை கல்வெட்டு, மணிமேகலை காப்பியம் வழியாக அறியத்தருகிறது. அந்தமான் பற்றி அரிய செய்திகளையுடைய நுால்.
– டாக்டர் கார்முகிலோன்