புதிய கோணத்தில் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
ஒவ்வொரு கதையும் முற்போக்குச்சிந்தனைகளை உள்ளடக்கியது. லுடைட்ஸ், குண்டுல், சகோபந்த் பனிப்பாறை, ரூம்பா என தலைப்புகள் தனித்துவமாக தெரிகின்றன. மனித உளவியலில் மாற்றங்களையும், குழப்பங்களையும் எதிர்காலத்தில் எவ்வாறு எதிர் கொள்வர் என்ற மையக்கருத்துடன் புனையப்பட்டுள்ளது.
தவறான அரசியல் போக்கு அறிவியலை எவ்வாறு பாதிக்கும் என்பதை அலசுகிறது. அதற்கான தீர்வுகளையும் பேசுகிறது. எதிர்காலத்தில் மனிதர்களிடம் ஏற்படப்போகும் சீர்கேட்டையும், உளவியல் சிக்கல்களையும், அதற்கு தீர்வாக அரசியலையும் நகைச்சுவையுடன் சொல்கிறது. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத விசித்திரமான உணர்வுகளை தரும் வித்தியாசமான கதைகளின் நுால்.
– ஊஞ்சல் பிரபு