சிறுவர்களுக்கு நற்பண்பை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
ஆதித்யாவின் நீலக்குடை, ஒரு கதை சொல்லட்டா, பலுானில் பறந்து வந்த தவளை, எலி வடிவில் பறந்த மின்மினி பூச்சிகள், குறுக்கே ஓடிய மான்குட்டி என்ற தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. உரையாடல்கள் வழியாக கதை சொல்லப்பட்டுள்ளது. சிறுவர்கள் புரிந்து கொள்ளும் நடையில் கவனமுடன் படைக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள், விலங்குகளை பாத்திரங்களாக்கி கற்பனையுடன் புனையப்பட்டு, தக்க விவரிப்புகளுடன் அமைந்துள்ளன. அன்பு, கருணை, உதவும் குணம் போன்ற உயர்ந்த பண்புகளை வளர்ப்பது கதைகளின் மையக்கருத்தாக அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு நல்லறம் போதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்.
– மதி