முகப்பு » சட்டம் » சட்டம் என்ன சொல்கிறது?

சட்டம் என்ன சொல்கிறது?

விலைரூ.220

ஆசிரியர் : ஏ.பி.ஜெயச்சந்திரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: சட்டம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சட்டப்படி செயல்பட வேண்டும் என, நம்மில் பலருக்கும் விருப்பம் உள்ளது. பல பிரச்னைகளுக்கு நம்மால், சமூக தீர்வு காண முடியாததற்கு, சட்டத்தின் மீது நமக்கு போதிய ஞானம்  இல்லாததே காரணம்.
குறிப்பாக, குடும்பப் பிரச்னைகளுக்கு நம்மால் சட்டப்படி தீர்வு காண முடிவதில்லை.  இந்த குறையை போக்கும் வகையில், சட்டம் பற்றிய அறிவை மிகவும் எளிமையாக விளக்கும் வகையில், இந்த நுால் வெளிவந்துள்ளது. கேள்வி – பதில் ரீதியில் ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளது, பாராட்டத்தக்கது,
குறிப்பாக, விவாகரத்து தொடர்பான சந்தேகங்கள், கணவன் வேறு பெண்ணுடன் வாழ்வது, பண மோசடி உட்பட சாதாரண மக்கள் சந்திக்கும் அனைத்தும் பிரச்னைகளுக்கும், சட்டப்பூர்வமான விளக்கத்தை ஆசிரியர் தந்துள்ளார்.
குடும்பப் பிரச்னைகள் மட்டுமின்றி, காப்பீடு தொடர்பான பிரச்னைகள், வங்கி கடன் போன்ற பிரச்னைகள் போன்றவற்றுக்கும் ஆசிரியர் சட்டப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நுாலை முழுமையாக படித்தால், பல பிரச்னைகளுக்கு நம்மால் எளிதில் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை நம் மனதில் ஏற்படுவது உறுதி.
– ச.சு.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us