முகப்பு » இலக்கியம் » குறுந்தொகை ஓவியம்

குறுந்தொகை ஓவியம்

விலைரூ.100

ஆசிரியர் : வெ.பரமசிவபாண்டியன்

வெளியீடு: வனஜா பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சங்க இலக்கியங்களில், 4 முதல், 8 அடிகள் கொண்ட, 401 காதல் பாடல்களின் தொகுப்பே எட்டுத் தொகை. எட்டாத காதலின் சுவை நம் மனதை எட்டி தொட்டு இழுக்கும்.
இதில் உள்ள பறவை, விலங்கு, மனித பாசப் போராட்டங்கள். 205 புலவர்கள் இதைப் பாடியுள்ளனர். கபிலர், பரணர், அவ்வையார் போன்ற புகழ் பெற்ற, 205 புலவர்களும், பெயரே தெரியாத, 10 புலவர்களும் பாடியுள்ளனர்.
கடந்த, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாடல்களைப் பலரும் முன்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து உள்ளனர்.
ஆனாலும், ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியரின் இந்நுால், பாடநுால் போல், பளிச்சென ஆங்கில மொழியாக்கம் மிளிர்கிறது.
அன்றில் பறவை பூவை இடையிட்டுப் பிரிந்தாலும், பல ஆண்டுகள் பிரிந்து விட்டதுபோல் துன்பம் தரும் (பாடல் 57). இதை ‘The anril feels a short interval of crossing a flower as a long year separation’ என அழகாக ஆங்கிலப்படுத்தியுள்ளார்.
ஆண் குரங்கு இறந்ததும், பெண் குரங்கு தன் குட்டியை உறவினரிடம் விட்டு விட்டு மலை மேல் ஏறி விழுந்து உயிரை விட்ட, ‘கைம்மை உய்யாக் காமர் மந்தி’ (பாடல் 69) பற்றியும் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தலைவன், தலைவி கூற்றையும், ஆங்கிலத்தில் கூறியுள்ளார். திணை, துறைகள் பற்றிக் குறிப்பிடவில்லை.
குறுந்தொகை மூலப் பாடலும், இவரது ஆங்கில விளக்கமும் சிறப்பாக உள்ளது. ஆனாலும், பாடலின் தெளிவுரை தரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனிலும் எல்லாருமே சங்கப் பாடலைப் படித்து பொருள் அறிந்து கொள்ள இயலாது.
பிற நாட்டாரும் நம் தமிழை உணர வேண்டி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. தமிழகத்தின் பள்ளிகளில் படிக்கும் ஆங்கில மாணாக்கர் அறிய வசதியாக இம்மொழியாக்கம்  செய்துள்ளார் ஆசிரியர்.
முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us