முகப்பு » கட்டுரைகள் » இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது

விலைரூ.300

ஆசிரியர் : நா.மகாலிங்கம்

வெளியீடு: மொழி பெயர்ப்பு மையம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அமெரிக்க இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் ஆசிரியர். தாய் பஞ்சாபி; தந்தை தமிழர். அவ்வப்போது பெற்றோரோடு இந்தியா வந்தவருக்கு, இந்திய மண் மணம் ஆசிரியரின் நெஞ்சை ஈர்க்கிறது.  படிப்பு அமெரிக்காவிலும், பிழைப்பு இந்தியாவிலும் பரிணமிக்கிறது.
ஆசிரியரின் ஆதங்கங்கள், ஆசைகள், கொதிப்புகள், வார்த்தைக்கு வார்த்தை என மொழி பெயர்க்காமல் ஆசிரியரின் உணர்வுகளை ஊர்வலமாக்கியுள்ளார் மொழிபெயர்ப்பாளர். எத்தனை பாராட்டினாலும் தகும்.
தம் தாய் – தந்தையர், பாட்டி – தாத்தா, நண்பன் ரவீந்திரா, அம்பானி, முகேஷ் அம்பானி, கவிஞர்ஸ்ரீஸ்ரீ, வரவரராவ், வேணுகோபால், மார்க்ரெட்,  குடும்ப பிரச்னை தீர்க்கும் நீதிமன்றத்தில் பற்பல வழக்குகளின் பாத்திரங்கள், இப்படிச் சிலரைக் கொண்டு நுால் நகர்கிறது.
FRIEND என்பதற்கு F Frank, R Recovers, IInsults, EEmotions, NNosecuts, DDedications, SSentiments பக்.111 விளக்கமாகவும் MARRIAGE என்பதற்கு M Mutual Understanding, A Adjustment with each other, R Responsibility, R Reassurance to each other, I Importance to Family, A Acceptance, G Gettogether of two families, E Emotional bonding பக். 281 விளக்கமாகவும் காட்டுவது பொருத்தமாக உள்ளது.
ரவீந்திரா போன்றோரின் ஊக்கம், ஆக்கம், உழைப்பு தன் சமூகத்தை உயர்த்தப் பாடுபட்டதை நுால் நெடுக  ஷோபாடே செய்தியாளர் வார்த்தையில், ‘வெளிநாடு சென்ற நம்பிள்ளைகள் இப்போது திரும்பிக் கொண்டிருக்கின்றனர்; காரணம், மேற்கில் விருந்து முடிந்து விட்டது...’ என்பது நுால் தலைப்பிற்கு இது பொருந்துகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us