முகப்பு » ஜோதிடம் » ஜோதிடத்தை எப்படி புரிந்து கொள்வது?

ஜோதிடத்தை எப்படி புரிந்து கொள்வது?

விலைரூ.200

ஆசிரியர் : க.மணி

வெளியீடு: அபயம் பப்ளிஷர்ஸ்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘டெலஸ்கோப்’ பார்த்திருக்கீங்களா? ‘இல்லை... எனக்கு, ‘பைனாக்குலர்’ தான் தெரியும்... மொட்டை மாடியிலிருந்து, நாலு தெரு தள்ளி இருக்கிற வீட்டின் ஜன்னல் வழியே, உள்ளே உத்துப் பார்ப்பேன்...’ என, வாயிலிருக்கும் 32ம் தெரிய சிரிக்கிறீங்களா... நீங்களாக எழுதி வைத்துள்ள உங்கள் தலைச் சுழி அப்படி! அப்படி உத்துப் பார்த்து நீங்கள், ‘வாங்கி’க் கட்டிக் கொண்டால், அதுவும் உங்கள் தலைச் சுழியே!
‘டெலஸ்கோப் வாங்கத் தோணவில்லை; பைனாக்குலர் வாங்கும் வரை தான் அறிவு இருக்கிறது’ என்பதெல்லாம், நீங்களாகவே, முற்பிறவி முடிந்ததும், இந்தப் பிறவி எடுப்பதற்கு முன் இடைப்பட்ட காலத்தில் எழுதி வைத்து, இப்போது செயல்படுத்தும் நிகழ்வுகள்.
‘இந்த டுபாக்கூர் பேச்செல்லாம் வேணாம். தானாக நடப்பதை, ‘ஏற்கனவே எழுதப்பட்டது’ எனச் சொன்னால், எனக்கு சிந்தனையே கிடையாதா? நான் மகத்தான சாதனைகளைச் செய்திருக்கிறேன். இந்த சந்தோஷம் எனக்கு வேண்டாமா? எல்லாத்தையும் கிரகம்ங்கிறீங்க... பூமியில் தானே நாம இருக்கோம்! விஞ்ஞானத்துக்கு வாங்க! பழம்பஞ்சாங்கப் பேச்செல்லாம் வேணாம்’ என்கிறீர்களா?
உங்கள் சந்தோஷத்தையும் நீங்களே தான் நிர்ணயிக்கிறீர்கள் ஜென்டில்மேன்!
‘நட்சத்திரங்களுக்கிடையில கற்பனைக் கோடு போட்டு இணைச்சு, சும்மாக்காச்சும், இது சிங்கம், இது ஆடு, இது எருமை, இது துலாக் கட்டைன்னு சொன்னா, நான் நம்பிடணுமா? என் மகள், என் மேலே கோவிச்சிட்டு போறான்னா, ‘நேரம் சரியில்லே’ங்கிறீங்க. எங்க சண்டைக்கும், நேரத்துக்கும் என்னங்க சம்பந்தம்? காலை 6:00 மணிக்கும் சண்டை போடுவோம்; ராத்திரி 9:03க்கும் சண்டை போடுவோம்.
‘ரப்பிஷ்’ பேச்செல்லாம் வேணாம்’ என்கிறீர்களா?
உங்கள் ஜாதகத்தில் ஆறாம் வீடு சரியில்லை.
‘வானியலை நம்புறேன்; நட்சத்திரம் பார்ப்பேன்; கிரகம், கோளாறுங்கிற ஜோதிட பொய் தேவையில்லை’ என்கிறீர்களா? நீங்கள் பயன்படுத்தும் காலண்டர், கடிகாரம் உருவானது எப்படி? பருவ நிலை மாற்றங்கள் துல்லியமாக அறிவிக்கப்படுகின்றனவே... எப்படி? உங்கள் மகள் முடிசூட்டு விழாவை, நல்ல நாள் பார்த்துச் செய்தீர்களே எப்படி?
ராகு காலம், எம கண்டம், நல்ல நேரம் ஆகியவை எப்படி மனித பயன்பாட்டுக்கென கண்டுபிடிக்கப்பட்டன என்பதை, ஜோதிடர்கள் கூட அறிந்திருக்க மாட்டார்கள்.
இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், ‘ஜோதிடத்தை எப்படி புரிந்து கொள்வது?’ புத்தகத்தைப் படிக்கலாம். வேண்டாமா... விட்டு விடுங்கள்! அதற்கான ஆசையும், நேரமும், நீங்கள் பெறும் அனுபவங்கள் வாயிலாக, அடுத்த ஜென்மத்திற்கென எழுதி வைத்து, அப்போது படித்துக் கொள்ளலாம். ஓகே?
பானுமதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us