முகப்பு » இசை » திரை இசை மும்மூர்த்திகள்

திரை இசை மும்மூர்த்திகள்

விலைரூ.325

ஆசிரியர் : பி.ஜி.எஸ்.மணியன்

வெளியீடு: வைகுந்த் பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
திரை இசையமைப்பாளர்கள் எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன் பற்றிய தொகுப்பு நுால். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி நடித்த மீரா திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன்.
பட்டினத்தார் நாடகத்தில் நடிக்கத் துவங்கிய வெங்கட்ராமனுக்கு, நள தமயந்தி என்னும் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அதில், கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார். ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் தான், எஸ்.வி.வெங்கட்ராமனை இசையமைப்பாளராகத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார்.
பரசுராமன் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் பி.ஆர்.சுப்பராமன். பாடகர்கள் கண்டசாலா, பி.லீலா, இசையமைப்பாளர்கள் தட்சணாமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ், டி.ஜி.லிங்கப்பா, கோவர்த்தனம், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி போன்றோரையும் திரையுலகத்திற்கு வழங்கியவர் சுப்பராமன்.
இந்த மூவரைப் பற்றி விரிவான தகவல்களுடன் வந்துள்ள நுால். அந்தக் கால விளம்பரங்களையும், நடிகர் – நடிகையரின் படங்களையும் அச்சிட்டு உள்ளது அழகு சேர்க்கிறது.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us