முகப்பு » வாழ்க்கை வரலாறு » திரையுலகில் செல்வி ஜெயலலிதா

திரையுலகில் செல்வி ஜெயலலிதா

விலைரூ.950

ஆசிரியர் : கவிஞர் பொன்.செல்லமுத்து

வெளியீடு: வைகுந்த் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதாவின், நடிப்புலகை விவரிக்கும் ஆவணப்பதிவு நுால். முதலில் வாழ்க்கை குறிப்பு, படங்களுடன் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. ஒன்பது பெரும் பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளது இந்த புத்தகம். முதல் பகுதி, ஜெயலலிதா முதன்மை வேடம் ஏற்று நடித்த படங்கள் பற்றி குறிப்பிடுகிறது. தொடர்ந்து நடித்துள்ள படங்களின் முழு விபரமும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவும், பாடல்களும், அவர் நடித்த படங்களை உருவாக்கிய கலைஞர்கள், உடன் நடித்த நடிகர் – நடிகையர் என, ஆய்வு நோக்கில் தலைப்புகள் உருவாக்கி, துல்லியமாக தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  படங்களின் தயாரிப்பு விபரம் முதல், நடித்த கதாபாத்திரம், கதை சுருக்கம், படம் எடுக்கப்பட்ட பின்னணி, உடன் பணியாற்றியோர் என முழு விபரங்கள் இந்த நுாலில் உள்ளன. தமிழில் மிகப்பெரிய சரிபார்க்கப்பட்ட ஆவணத் திரட்டு இது. தகவல்கள் முழுமை பெற்றுள்ளன.
ஜெயலலிதாவின் திரை உலக வாழ்க்கையை, முழு அளவில் ஆராய்ந்தால் மட்டுமே, இந்த தகவல்களை சேகரிக்க முடியும். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு காலக்கட்டத்தை உள்ளடக்கிய மதிப்புமிகு தகவல் பெட்டகம்.    
அமுதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us