முகப்பு » இலக்கியம் » தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்

தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்

விலைரூ.300

ஆசிரியர் : முனைவர் தேவிரா

வெளியீடு: நந்தினி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ் இலக்கிய வரலாற்று செய்திகளை சிறிய தகவல்களாக தொகுத்து கூறும் நுால். பத்தி அமைப்புக்கு உட்படாமல் தகவல் அமைப்புடன் உள்ளது. ஒரு தகவல் இரண்டு அடிக்குள் சொல்லப்பட்டுள்ளது.

மத்திய அரசு குடிமைப்பணி தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணி, பேராசிரியர் தகுதித் தேர்வு,  ஆசிரியர் தகுதி தேர்வு போன்றவற்றுக்கு தயாராவோருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழில், இலக்கியங்கள், இலக்கணங்கள், நாட்டுப்புறவியல், பிற்கால புலவர்கள், உரையாசிரியர்கள், உரைநடை, திறனாய்வு, பெண்ணியம், இதழ்கள், இயக்கங்கள், மாநாடு, செம்மொழி தமிழ், கல்வெட்டு, இலக்கிய இயக்கங்கள், அறிவியல் தமிழ், நவீனம் குறித்து பல்லாயிரம் செய்திகள் இடம் பெற்றுள்ளன. அந்த செய்திகள் எளிதில் மனம் கொள்ளும் வகையில், எளிய தகவலாக்கப்பட்டுள்ளன.

புத்தகத்தின் உள்ளடக்கம் பத்திகள் கொண்டதாக அமைக்கப்படவில்லை. சிறு தகவல் துணுக்குகள் போல் சுவாரசியமாக உள்ளதால் எளிதில் மனதில் பதியும். படிப்பதிலும் சோர்வு ஏற்படாது. தகவல்களை உற்சாகமாக மனம் கொண்டு இயல்பாக கடந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி வரலாறு குறித்து அனைத்து தரப்பினரும் பயன்படுத்த ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us