முகப்பு » சட்டம் » விவாகரத்து – இளம் வாரிசு பாதுகாப்பு

விவாகரத்து – இளம் வாரிசு பாதுகாப்பு

விலைரூ.150

ஆசிரியர் : ஏ.கே.எஸ்.தாஹிர்

வெளியீடு: கதிஜாஜி புத்தகம்

பகுதி: சட்டம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதை அறிய இயலாது. ஆனால் விவாகரத்து நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படுகிறது என்பது அறிந்த உண்மை என்னும் தொடக்கத்துடன் திருமணங்கள், வியாபாரங்கள் என்னும் நிலைக்கு தரம் தாழ்ந்து விட்ட உண்மையை எடுத்துக் கூறும் நுால்.
ஹிந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் திருமணம் தொடர்பாகவும்  குடும்ப நீதிமன்றங்கள் தொடர்பாகவும், விரிவாக எடுத்துரைக்கிறது. ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லி கலியாணம் செய் என்பதை ஆயிரம் பொய் சொல்லிக் கல்யாணம் செய் என்று மாற்றிவிட்டார்கள்.
பொய் சொல்லித் திருமணம் செய்யக் கூடாது என்னும் உண் மையை எடுத்துரைப்பதோடு, சுயமரியாதைத் திருமணம் எப்போது நடைபெற்றது என்கிற வரலாற்றையும் எடுத்துரைக்கிறது. வரலாற்று முறையிலும், சமூக அமைப்பிலும் திருமணம் தொடர்பாக உள்ள அனைத்துச் செய்திகளையும் திரட்டி முக்கியமான திருமணச் சட்டங்களையும் அறிமுகம் செய்கிறது. இந்த நுாலை படித்தால் விவாகரத்து குறையும் என்பது உண்மை.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us