ஆடுகளம்

விலைரூ.200

ஆசிரியர் : தினேஷ் அகிரா

வெளியீடு: வாசக சாலை பதிப்பகம்

பகுதி: விளையாட்டு

ISBN எண்:

Rating

பிடித்தவை
கிரிக்கெட் விளையாட்டு பற்றி விரிவான விமர்சனத்தை முன் வைத்துள்ள நுால். விளையாட்டின் ஆடுகளம், வீரர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம், பந்து வீச்சுக்குச் சாதகமான சூழல், விளையாட்டின் நுட்பங்கள் என பலவகையிலும் விவரிக்கிறது.

இதழ்கள்,  சமூக வலைதளங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பலரால் விரும்பி வாசிக்கப்பட்டது. கிரிக்கெட்டை, ஆதிக்கத்தின் கூறுள்ள விளையாட்டு என சுட்டுகிறார். இந்த விளையாட்டில் வெற்றி பெறும் பெருமை கொள்ளாத வீரர் சச்சின், ‘விளையாட்டில் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று விராட் கோலிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நுட்பமாக விளையாடுவதாக வீரர் நடராஜன் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த ஓவர் போட்டிகளில் வெற்றி டெம்பிளேட் உருவாக்கி, அணி வெற்றிக்கு வழி வகுப்பதுடன், எந்த நிலையிலும் தடுமாறாதவர் தோனி என குறிப்பிட்டுள்ளார். பேட்டிங்கை நேசிக்கும் ரோஹித் சர்மா, சுழற்பந்து வீச்சில் சாதுர்யம் காட்டும் அஸ்வின் மற்றும் வெளிநாட்டு வீரர்களான டிவில்லியர்ஸ், பிராட்மேன் வாக்னர், பாபர் ஆஸம், ஆண்டர்சன் பற்றி தகவல்களை தருகிறார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு உகந்த நுால்.
– ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us