முகப்பு » கதைகள் » பாராட்டு விழா (சிறுகதைகள்)

பாராட்டு விழா (சிறுகதைகள்)

விலைரூ.260

ஆசிரியர் : பிரபு சங்கர்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அன்றாடம் கேள்விப்படும், நேரில் பார்க்கும் சம்பவங்களை கற்பனை கலந்து கதைகளாக வடித்திருக்கிறார் ஆசிரியர் பிரபு சங்கர். புத்தகத்தின் தலைப்பே ஒரு கவிஞருக்குப் பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த அவலத்தை விளக்குகிறது. கோவில் பொருட்களை வைத்தே கடவுள்  இல்லை என்று கோவில் சுவரில் எழுதுதல், நடிகையின் கணவன் அவள் நடித்த படத்தைப் பார்த்ததும் புலம்பல் என பதிவாகியுள்ளது.

 முதிர் கன்னியின் மனதை நோகடிக்க விரும்பாத தந்தையின் பரிவு, பதவி உயர்வு கிடைக்கவில்லை என வேலையை துறந்து பெட்டிக்கடை வைத்த அலங்கோலம் என கருத்துகளும், வர்ணனைகளும் வாசகர்களின் அனுபவத்துடன் பிணைந்திருப்பதை உணரலாம்.
அந்தந்த கால சூழ்நிலை, கால நிலை, மனோநிலையை ஒட்டி அமைந்திருக்கின்றன.  பல்சுவையளிக்கும் இந்தத் தொகுப்பு, பலரை இளமை காலத்திற்கு அழைத்து செல்லும் என்பது நிச்சயம்.
இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us