முகப்பு » இலக்கியம் » முன்னோடிகள்

முன்னோடிகள்

விலைரூ.100

ஆசிரியர் : அ.ப.பாலையன்

வெளியீடு: பொம்மி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நாட்டின்  விடுதலை, மொழி உணர்வு, இலக்கியத் திறன், சீர்திருத்த கருத்து, இலக்கிய இலக்கண வளத்தை எடுத்துரைத்த அறிஞர் பெருமக்கள் என, 30 தகைசால் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால்.

ஜாதி, மத கொடுமைகளுக்கு எதிராக சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பிய அயோத்திதாசர், தாழ்த்தப்பட்ட குழந்தைகள் கல்வி பயில்வதற்காக சென்னையில் இலவச பள்ளிகளைத் துவங்கிய நிகழ்வுகள் குறித்து தரப்பட்டுள்ளது.

எழுத்தராக வாழ்க்கையைத் துவங்கி துணைவேந்தராக உயர்ந்த டாக்டர் மு.வ., படைப்புகளின் தொகுப்பு, இலக்கியத் துறையில் ஆளுமையாக விளங்கிய பன்முக ஆற்றலாளர் தொ.மு.சி.ரகுநாதன் ஆய்வின் சிறப்பு, நாட்டுப்புற பாடல்களைச் சேகரித்துப் பதிப்பித்த வானமாமலை பற்றிய அரிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. சிந்திக்கவும், செயல்படவும், உயர் லட்சியத்துடன் வாழவும் துணை புரியும் நுால்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us