முகப்பு » ஜோதிடம் » அதிர்ஷ்ட நம்பர்கள்

அதிர்ஷ்ட நம்பர்கள்

விலைரூ.190

ஆசிரியர் : தமிழ்வாணன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
துறவிகள் கூட அதிர்ஷ்டத்தை விரும்புகிற காலம் இது. பலவித ஜாதகம் முறைகளில் அதிர்ஷ்ட எண் சாதக முறையும் ஒன்று. இது நிகழ்காலம், எதிர்காலம் குறித்த கணக்கு. அது பற்றி விளக்கமாக கூறும் நுால். பெயரை வைத்து ஆங்கிலத்தில் எழுத்துக்கு ஒரு எண் என்ற முறையில் கூட்டல் செய்து பெயரெண் கண்டுபிடிக்கப்படுகிறது. இதில் ஒன்பது என்ற எண் எந்த எழுத்துக்கும் வழங்கப்படவில்லை.

ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டுமே உலகளாவிய மொழி என்பதால், எண் வழங்கப்பட்டதை ஆசிரியர் தமிழ்வாணன் தமிழ் எழுத்துக்களுக்கும் எண் கண்டுபிடித்து பட்டியலிட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று.

பண்டிட் சேதுராமன் எண் ஜாதகத்தை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் என்பர். அவரது முறையில் உள்ள சில தவறுகளை சான்றுகளுடன் புலப்படுத்துகிறார் ஆசிரியர். அதிர்ஷ்ட சக்தியை பெருக்கும் கற்கள் நிறங்கள் பற்றிய ஆய்வும் அறிய வேண்டிய ஒன்று. தன்னைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகம்.

சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us