முகப்பு » கட்டுரைகள் » முன்னோர் சொன்ன வாழ்க்கை ரகசியங்கள்

முன்னோர் சொன்ன வாழ்க்கை ரகசியங்கள்

விலைரூ.100

ஆசிரியர் : முனைவர் சஹா நாதன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கையை பயனுள்ளதாகவும், மகிழ்வுடனும் வாழ கருத்துகளை உரைக்கும் நுால். நவீன காலத்திற்கு ஏற்ப 31 தலைப்புகளில் கூறப்பட்டுள்ளன. எல்லாரும் நன்றாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கை என்பது எப்போதும் ஜெயிப்பதற்கு மட்டுமே எனக் கூறி, அதற்காக தொடர்ந்து செய்ய வேண்டிய விடாமுயற்சி பற்றிய கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

எப்படி வாழ வேண்டும் என்பதை சித்தர்கள் கருத்துகளைக் காட்டி பேசியுள்ளது. தொல்லை கொடுப்பவர்களைக் கழித்துவிட்டு, உயரும் வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. யார் பெரியவர் என்ற மனப்பான்மையை விட்டுவிட்டு, தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என வழிகாட்டும் வகையில் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. தீய எண்ணங்களை விட்டு, லட்சியத்தை அடைய உழைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. சுருக்கமாக கருத்துகளை அளித்துள்ள நுால்.

முகில் குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us