வாழ்க்கை அனுபவங்களை இன்றைய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு அசை போட்டு எழுதப்பட்டுள்ள நுால். சினிமா தியேட்டர், வானொலியின் வரவு, கையால் எழுதிய கடிதங்கள், தொலைபேசியின் வளர்ச்சி போன்றவற்றை சுவாரசியம் குறையாமல் சொல்கிறது.
‘டூரிங் டாக்கீஸ்’ என துவங்கி, 33 அத்தியாயங்களில் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்துள்ளது. பெரும்பாலும் தொழில் நுட்பங்களின் வருகையால் வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சி, அவற்றின் வளர்ச்சி குறித்த பார்வையுடன் உள்ளது.
எளிய நடையில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தெளிவுபடுத்துகிறது. கருப்பு வெள்ளையாய் கண்டவற்றை, வண்ணத்தில் பார்த்த போது ஏற்பட்ட மன உணர்வை வெளிப்படுத்தும் நுால்.
– ஒளி