முகப்பு » மாணவருக்காக » கங்கைக்கரை சிறுத்தை

கங்கைக்கரை சிறுத்தை

விலைரூ.150

ஆசிரியர் : இரா.மலர்அமுதன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
நள்ளிரவில் வீடு புகுந்து, மனிதர்களை கொன்று புசிக்கும் சிறுத்தை பற்றிய நுால். அதை வேட்டையாடிய சாகச அனுபவத்தை விவரிக்கிறது. சிறுத்தை நடமாட்டத்தால் கிராமங்களில் நிலவிய மூட நம்பிக்கை, வதந்திகள் பற்றி எல்லாம் சுவாரசியம் குன்றாமல் தருகிறது. மயிர் கூச்செறியும் சாகசங்கள் நிறைந்தது. வேட்டையாட போனவரையே சிறுத்தை பின்தொடர்ந்து கொல்ல முயல்வது நடுங்க வைக்கிறது.

ஒரே மூச்சில் படிக்க வைக்கும் எளிய நடை. படித்ததும் சிறுத்தை நம்மை பின்தொடர்வது போல் திகில் உணர்வு ஏற்படும். அந்த அளவு காட்சியாக பதிவாகியுள்ளது. சூழலியல் மற்றும் வன விலங்குகள் சார்ந்து புரிதல் ஏற்படுத்தும் நுால். பள்ளி மாணவர்களுக்கு ஏற்றது.

– கண்ணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us