நள்ளிரவில் வீடு புகுந்து மனிதர்களை கொன்று புசிக்கும் சிறுத்தை பற்றி விவரிக்கும் நுால். அதை வேட்டையாடிய சாகச அனுபவத்தை விவரிக்கிறது. சிறுத்தையால் கிராமங்களில் நிலவிய மூட நம்பிக்கை, வதந்திகள் பற்றி சுவாரசியம் குன்றாமல் தருகிறது. மயிர் கூச்செறியும் சாகசங்கள் நிறைந்தது. வேட்டையாட போனவரையே சிறுத்தை பின்தொடர்ந்து கொல்ல முயல்வது நடுங்க வைக்கிறது.
ஒரே மூச்சில் படிக்கும் வகையில் எளிய நடையில் உள்ளது. படித்ததும் சிறுத்தை நம்மை பின்தொடர்வது போல் திகில் உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவு காட்சியாக பதிவாகியுள்ளது. சூழலியல் மற்றும் வன விலங்குகள் சார்ந்து புரிதல் ஏற்படுத்தும் நுால்.
– கண்ணன்