முகப்பு » கட்டுரைகள் » வீழ்வதற்கல்ல வாழ்க்கை

வீழ்வதற்கல்ல வாழ்க்கை

விலைரூ.170

ஆசிரியர் : லேனா தமிழ்வாணன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘தினமலர்’ வாரமலர் இதழில், ‘வீழ்வதற்கல்ல வாழ்க்கை’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். அன்பு, பொறுமை, விட்டுக் கொடுத்தல், பெருந்தன்மை என்ற துாண்களைக் கொண்டு வெல்ல முடியும் என நம்பிக்கை தருகிறது.

மனத் தடையைத் துாக்கி எறிந்தால், புளியம் பழம் போல் ஒட்டாத உறவுகளையும் பலாப்பழம் போல் மாற்ற முடியும் என்கிறது. குறைந்த வருமானத்தில் நிறைவாக வாழும் குடும்பங்களை விட, நிறைந்த வருமானத்தில் மகிழ்ச்சியை தொலைத்தவர் அதிகம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

மருத்துவச் செலவுகளைக் குறைக்கும் வழிகள், மறதியால் ஏற்படும் நஷ்டத்துக்கு தீர்வுகள் குறிக்கப்பட்டுள்ளன. சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளியின்றி முரண்பாடற்று மகிழ்வுடன் வாழ வழிகாட்டும் அற்புதமான நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us