ஸ்ரீ செண்பாக பதிப்பகம், 34 பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை- 17
நாமக்கல் கவிஞர் சிறந்த தேசியக் கவிஞர் என்பது எல்லாரும் அறிந்த செய்தி. கவிஞரவர்கள் சிறந்த கதையாசிரியரும் ஆவார். "மலைக் கள்ளன்' என்ற இவரது கதை சிறந்த திரைப்படமாக வெளிவந்து பெரு வெற்றி பெற்றது.இந்நூலுள் கவிஞர், தம் தந்தையார் சொல்வது போலவும், தாயார் சொல்வது போலவும் கதைகள் படைத்துள்ளார். சங்கிலிக்குறவன், கோவில் திருட்டு, இலுப்ப மர பிசாசு எனும் கதைகள் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள், கேட்டறிந்த சுவையான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். உணர்வும், உற்சாகமும் தரும் தமிழ் நடை. யாவரும் படித்துச் சுவைக்க வேண்டிய நூல் இது.