தென்றல் பதிப்பகம் பழைய எண்:3 ஏ :புதிய எண்:11 இந்திப் பிரச்சார சபைத் தெரு. தி.நகர். சென்னை- 600 017. (பக்கம்: 368 , விலை: ரூ. 80-00)
ஆசிரியை "திருநெல்வேலி சைவ சமையல் நிபுணர் ' என்னும் பட்டத்தைப் பெற்றவர். அதனால் அதற்கேற்ற வகையில் சமையல் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. காய்கறிப் பாயசம், சர்க்கரை அதிரசம், புழுங்கல் அரிசி லட்டு ஆகியவை இனிப்புப் பதார்த்தங்களில் சில. பொடி வகையில் ஜீரணத்திற்கு "அஷ்ட சூர்ணப் பொடி' தயாரிப்பும் உண்டு. துவையலில் மாவிலைத் துவையல் வித்தியாசமானது. ராயர் கொழுக்கட்டை, பூரணங்களில் பலவிதம் என்று கைமணக்கும் பல சமையல்கள் விளக்கங்களைக் காணலாம் .பல்வேறு பயனுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குறிப்புகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குடும்பத் தலைவியர் படித்து பயன்பெறும் வகையில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது