ஷ்ரீ செண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 132.).
புதுமைப்பித்தன் சமூகத்தின் பல கூறுகளையும் உற்று நோக்கி தனது சிந்தனை ஓட்டத்திற்கேற்ப மிகக் கடினமான விஷயங்களைக் கூட மிக எளிமை
யாகப் புரிந்து கொள்ளும் படி தன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஜாதி-மத நையாண்டிச் சிறுகதைகள் என்ற இத்தொகுப்பில், `சங்குத் தேவனின் தர்மம்,' `மணக்குகை
ஓவியங்கள்,' `கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்,' `கயிற்றரவு', `விநாயகர் சதுர்த்தி' இப்படி 16 சிறு
கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
`திருநெல்வேலி ஜில்லா மூன்று விஷயங்களுக்குப் பிரசித்தி பெற்றது' (14) என்பதை `புதிய கந்த புராணத்திலும்,' `போருக்கு முதல்வனையும் ஊருக்கு மூத்தவரையும் நான் தான் அழைத்துக் கொண்டு போக வேண்டும்' (63) என்று குருட்டுக்கிழவியிடம் கூறி தோற்ற யமனை `காலனும் கிழவி'யிலும், `மரணம் என்றால் என்ன?' (67) என்ற மழலையின் கேள்விக்கு விடையிறுக்க முடியாத யமனை `மனக்குகை ஓவியங்களிலும், `மனம் என்ற ஒன்று உடம்பை விட்டுத் தனியாக இயங்கக் கூடிய ஒன்றா அல்லது நாதத்துக்கு வீணை என்ற சாதனம் அவசியமாக இருப்பது போலத்தானா? (123) என்னும் தத்துவத்திற்குக் கற்பனையை `கயிற்றரவு' கதையிலும் நையாண்டியாக எடுத்துரைத்து வாசகர்களை சிந்திக்கச் செய்துள்ள புதுமைப்பித்தனின் சிறுகதை உத்திகளை இத்தொகுப்பில் படித்து மகிழலாம்.