ஆசிரியர்: பிரிட் ஜோசப் காப்ரா. தமிழாக்கம்: பொன். சின்னத்தம்பி முருகேசன். சந்தியா பதிப்பகம், 57ஏ, 53வது தெரு, அசோக் நகர், சென்னை-83. தொலைபேசி: 24896979, 55855704. (பக்கம்: 452)
கீழ்த்திசை நாடுகளின் இறை அனுபவங்களில் ஈடுபாடுள்ள பொதுவான வாசகர்களுக்கு இப்புத்தகம் உகந்தது. பிரபஞ்சமே நடன நாயகனின்
சிவதாண்டவமாக காப்ரா காணுகிறார்.
இயற்பியல் பற்றி அறிந்திராத பலரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கணிதவியல் கோட்பாடுகளை தவிர்த்து தொழில்நுட்ப மொழியை சாராமல்
நவீன இயற்பியலின் கொள்கைகளையும், கருத்தாக்கங்களையும் அதன் சாராம்சம் மாறாமல் தமிழில் மொழி பெயர்த்து தந்திருப்பது அரிய முயற்சி.
நுண்ணறிவியல் துகள்களை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அறியும் பொழுது துகள்களை `துமி' என்று ஆசிரியர் உருவகப்படுத்தியது
பொருத்தமானதாகவே தோன்றுகிறது.
மனதில் உணர்ந்து வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒன்றை தாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்ற ஒரு வாசகரின் கூற்று
இப்புத்தகத்தை முழுமையாக படித்து உணரும் போது அறிய முடிகிறது.
இயற்பியல் வல்லுனர்கள் அளித்த பேரண்டத்தை பற்றிய கொள்கைகள் மற்றும் அதன் படிப்படியான வளர்ச்சிகள் இறையனுபவங்களோடு எவ்வாறு
ஒப்புமை கொள்கின்றன என்பதை ஆழமான கருத்துக்களுடன் விளக்கப்படுகின்றன.
ஆற்றல் பொட்டலங்கள்`குவாண்டம்' என்றாகிறது. `போட்டான்கள்' தனி வகைத் `துமி'கள். துமியியல் என்பது கிழக்கிந்திய தத்துவார்த்தக்
கருத்துக்களுடன் ஒத்துப் போகிறது. ஆகவே, இயற்பியல் நிபுணர் நுணுக்கமான கருவிகளைக் கொண்டு பருப்பொருளை துருவி ஆராய்வது போல,
தியானம் என்ற நுண்ணிய யுக்தியைக் கொண்டு உணர்வு நிலையை ஆன்மிக ஞானியர் கடக்கின்றனர். இந்த அடிப்படையில் சிந்திக்கும்போது சமூக
மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை சக்தி உருவெடுக்கும். இதைத் தான் இந்து நூல் அலசுகிறது.
சிந்தனையாளர்களுக்கு விருந்தாக அமைந்த நூல்.