அட்வகேட் ஆர்.வேதாந்தம், 230, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 172.)
இந்து சமயத்தில் வைணவ நெறி இன்றியமையாதது ஆகும். வைணவம் போதிக்கும் நன்னெறிகள் வெளிநாடுகளிலும் தற்போது பரவி வருவதைக் காண்கிறோம். இந்நூல், வைணவ, நெறிக்கான ஓர் ஒப்பற்ற கையேடு என்றால் மிகையாகாது.
வைணவர்களின் உயர்ந்த நோக்கம் பிறர் துன்பம் கண்டு பொறுக்க மாட்டாது இரக்கம் கொள்வது என்று கூறுவதும் (பக்.11) திருமந்திரத்தின் பெருமையை தெளிவாக விளக்குவதும் (பக்.40-56) அருமை. கீதையின் சுருக்கத்தைக் கூறுவதும் (பக்.157-169) ஆசிரியரின் நுண்ணிய அறிவாற்றலை எடுத்துக்காட்டுகிறது.
தேவையான இடங்களில், எம்பெருமானின் வர்ணப் படங்களும், தெளிவான அச்சும் நூலிற்குப் பெருமை சேர்க்கின்றன.
வைணவம் பற்றி அறிய வேண்டுவோர் படிக்க வேண்டிய நூல் இது.