‘உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான். இப்போது வேலையிலிருக்கும் இடம் உன்னை இன்னும் இருபது வருடங்களில் ஒரு பெரிய மனிதனாக உயர்த்திவிடுமா என்று நீயே நின்றாக யோசித்துப்பார்.ஒரு திட்டம் முன் யோசனையும் இல்லாமல் காலம் கழிக்காதே. உடனே அங்குமிங்கும் சுற்றிப் பார், அலைந்து பார், தேடிப் பார். இந்த வேலையை விட்டொழித்துவிட்டு உடனே வேறிடத்தில் சேர்ந்துக்கொள். இன்றைய எஜமானனுக்கு உன்னைத் துரோகம் செய்ய வைப்பவனாக என்னை மாற்றாதே.- ஆகாயத்தாமரை நாவலில் இருந்து.. '