வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18
என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல வெறியோடும் பேராசையோடும் உலகை எனது இருப்பிடத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள். எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும், நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாகத் தனிமையும் துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காணமுடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகுபுனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ்ப் புனைவியலை உருவாக்குகின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.