உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.
சுஜாதா குறுநாவல்கள் இரண்டாம் தொகுதியில் முதல் தொகுதியைப் போலவே பத்துக் குறுநாவல்கள் இடம்பெறுகின்றன. பெருநகர் சார்ந்த மனோபாவங்களையும் நெருக்கடிகளையும் ஒரு வலைப்பின்னல் போன்ற கதையமைப்பினால் எழுதிச் செல்லும் சுஜாதாவின் இந்தக் குறுநாவல்களில் பல அவை வெளிவந்த காலத்திலிருந்து தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருபவை. இந்தத் தொகுதியில் உள்ள குறுநாவல்களை மொத்தமாக வாசிக்கும் போது நவீன வாழ்க்கை என்ற சிக்கலான பொறியமைப்பிற்குள் தன்னிச்சையின்றிக் கொண்டு செலுத்தப்படும் மனிதர்களின் போராட்டங்கள் உக்கிரமாக எழுதப்படுகின்றன. இந்தப் பொறியமைப்பிற்குள் சுய தேர்வுகளுக்கு இடமில்லை. தற்செயல்கள், அபத்தங்கள் வழியே மீள முடியாத சுழல்களுக்குள் சிக்கிக் கொள்கிறவர்கள்தான் சுஜாதாவின் பெரும்பாலான கதாபாத்திரங்கள்.