பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் எல்லா மொழிகளிலும் தொன்றுதொட்டே இருந்து வருகின்றன. மேலும் மேலும் உருவாகிவருகின்றன. அச்சம், வியப்பு, அருவருப்பு, எனும் உணர்வுகள் இக்கதைகளில் உச்சம் கொள்கின்றன. உண்மையில் இவை மானுட மனத்தின் ஆழங்களில் எழும் அலைகளின் மறுவடிவங்களே. ஆகவேதான் உலகமெங்கும் இலக்கியத்தில் பேய்க் கதைகள் முக்கியமான இடம் வகிக்கின்றன. இக்கதைகள் பீதியும், பரபரப்பும் உருவாகும்படி எழுதப்பட்டவை. ஆனால் தீவிர வாசிப்பில் மனிதமனதின் அறிய முடியாத ஆழங்களை நோக்கி இட்டுச் செல்பவை.