உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.
நவீன இலக்கியத்தினுள் நுழைய விரும்பும் வாசகனுக்குரிய முழுமையான எளிய கையேடு இது. நவீன இலக்கியம் என்றால் என்ன, அதனுள் நுழையும்போது வரும் சிக்கல்கள் என்ன, ஒரு வாசகனாக எப்படி நம்மைத் தயாரித்துக்கொள்வது போன்ற வினாக்கள் எளிமையாக இந்நூலில் விளக்கப்படுகின்றன. நூற்றாண்டுகால நவீனத் தமிழிலக்கியத்தின் சுருக்கமான வரலாறு அளிக்கப்பட்டுள்ளது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கியஇயக்கங்கள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. இன்றியமையாத இலக்கியக் கலைச்சொற்களுக்குப் பொருள் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியப் படைப்பாளியும் இலக்கிய விமர்சகருமான ஜெயமோகன் அவரது தெரிவில் நவீன இலக்கியத்தின் சிறுகதை, நாவல், கவிதை ஆகியவற்றிலும் வணிக எழுத்திலும் உள்ள குறிப்பிடத்தக்க நூல்களின் பட்டியல் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இந்நூலில் இலக்கியஆக்கம். இலக்கிய வாசிப்பு என்ற இரு தளங்களையும் ஆசிரியர் மிக எளிமையாக விளக்குவதும் குறிப்பிடத்தக்கது