கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 75
மினுமினுப்பும் பளபளப்புமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது பி.பி.ஓ. துறை. நினைத்து பார்த்திருப்போமா? எடுத்த எடுப்பில் எகிறவைக்கும் சம்பளம். அறுசுவை உணவு.அருந்தவேளாவேளைக்குப் பழச்சாறு. ஒன்ஸ்மோர் போகலாமா நண்பா என்று கேட்டு கையைப்பிடித்து இழுத்து ஊர் சுற்றிக் காட்டுகிறார்கள். எல்லாம் சரிதான். ஆனால் இதற்கு நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் கூடுதலோ?
அமெரிக்கா விழித்திருக்கவேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காக நாம் நம் உறக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமா? நிஜத்தில் இது எப்படிப்பட்ட துறை? பளபளப்பை யும் மினுமினுப்பையும் தாண்டி இதில் என்ன இருக்கிறது? பெண்கள் அதிக அளவில் இத்துறையில் காலடி எடுத்து வைத்திருப்பது ஏன்? பி.பி.ஓ. வரமா சாபமா? பி.பி.ஓ. என்னும் துறையின் ஆன்மாவை உள்ளது உள்ளபடி பதிவு
செய்திருக்கிறது இந்நூல்.