சுவாரசியம் மிக்க சிறுகதைகளின் தொகுப்பு நுால். புத்தகமே ஒரு கதையின் தலைப்பில் அமைந்துள்ளது.
அதிர்ஷ்டம் அது இஷ்டம், எதுவும் நடக்கும், தபால் பெட்டி, நியாயங்கள் காயப்படக்கூடாது, அது அது அப்படித்தான், நான்கு கட்டளைகள் இரண்டு கல்யாணம், சுட்டால் தான் நெருப்பு, மலரினும் மெல்லியது மங்கை மனசு, பாதை மாறிய பயணம், வெளிப்பார்வை வேறுதான் உட்பட 20 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
நல்லது செய்தால் நல்லதே நடக்கும், கெடுதல் செய்தால் கெடுதல்தான் கிடைக்கும் போன்ற கருத்துகளை உள்ளடக்கமாக கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் அமைந்து வாழ்வை செம்மைப்படுத்தும் நோக்கில் நெகிழ்வூட்டுகின்றன. வாழ்க்கையை செம்மைபடுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்