கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80.
ஜார்ஜ் வாஷிங்டனைத் தவிர்த்துவிட்டு அமெரிக்க சுதந்தரப் போராட்ட வரலாறை எழுத முடியாது. ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையில்தான் அமெரிக்க விடுதலைப் போர் தொடங்கியது. அவர் மட்டும் படைகளுக்குத் தளபதியாக இல்லாமல் இருந்திருந்தால், அமெரிக்க விடுதலை அத்தனை எளிதாக சாத்தியமாகியிருக்காது. பண்ணை முதலாளி, சர்வேயர், படைத் தளபதி, அமெரிக்க ஜனாதிபதி என விரிகிற வாஷிங்டனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் போராட்டங்களால் நிரம்பியவை. பிரமிக்கவைக்கும் ஒரு மனிதரின் சாகச வரலாறு இந்நூல்.