கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
விளையாட்டுப் பருவத்தில் சிறுமி ஒருத்தியின் ஆசை என்னவாக இருக்கும்? பூக்கள் பறிப்பது, பட்டாம்பூச்சி பிடிப்பது. ஆனால் சிறுமி மனுவுக்கு பொம்மைகளைவிட போர் செய்ய உதவும் ஆயுதங்களே பிடித்திருக்கின்றன. ஜான்சியின் வயதான மன்னர் கங்காதரனுக்கு மனைவியான மனு, லட்சுமி பாய் ஆனார். நீண்ட நாள்கள் கழித்து பிறந்த குழந்தையும் இறந்துபோனது. கங்காதரனும் இறந்து போனார். ஆங்கிலேயர்கள் ஜான்சியைக் கைப்பற்ற நாக்கைச் சுழற்றிக் கொண்டுவந்தார்கள். அந்த நொடியில் லட்சுமி பாயின் கரங்களில் வாள் சுழல ஆμம்பித்தது. புரட்சிப் பெண் லட்சுமி பாயின் வாழ்க்கையைப் படிக்கும்போது, துணிச்சலுக்கான அர்த்தத்தை முழுமையாக உணரலாம்.