கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
தேசிய கீதம், கீதாஞ்சலி, சாந்தி நிகேதன், வங்காளம் ரபீந்திரநாத் தாகூர் நினைவில் கொள்ள இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சிறுவயதில் தாகூருக்கு வகுப்பறைகள் பிடிக்கவில்லை. வகுப்பறையின் ஜன்னல் வழியே தெரியும் மேகமும் பறவைகளும், செடி, கொடி, மரங்களும் அவருக்குக் கவிதைகளாகத் தெரிந்தன. தாகூர் அடையாளப்படுத்தும் விஷயமாக கவிதை மாறிப்போனது. மென்மையான மனிதர் தாகூர். ஆனால் வங்கப்பிரிவினையை எதிர்த்து அவர் நடத்தியதோ அழுத்தமான போராட்டங்கள். தாகூரின் வாழ்க்கையை வாசிக்கும் போது, ஒரு நல்ல கவிதையை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.