கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
இரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர் அடால்ஃப் ஹிட்லர். கண்மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் இவர். குரூரத்தின் உச்சகட்டத்தை அநாயாசமாகக் கடந்து சென்றவர் ஹிட்லர். கரப்பான் பூச்சிகளை அடித்துக் கொல்வதைப் போல் மக்களைக் கொன்று குவித்தார். பதைபதைக்க வைக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறை அதே அழுத்தத்துடன் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.