ஒரு பத்திரிகையாளனின் கறார்த்தன்மையுடன் வாழ்க்கையை அணுகி, படைப்பாளிக்குரிய பரிவுடன் பிரச்னைகளை அலசும் கதைகள் இவை. மானுட குலத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் உறவுகளின் உரசல்கள்தாம் இதுகாறும் காரணமாக இருந்துவந்திருக்கின்றன. சுதேசமித்திரனின் இக்கதைகள், உரசல்களை அதன் முழு வீரியமுடன் காட்சிப்படுத்துகின்றன. நிரந்தரத் தீர்வு என்று ஏதுமில்லாத யதார்த்தத்தின் நேர்த்தியற்ற தன்மையின்மீது இக்கதைகள் முன்வைக்கும் கேள்விகள், அதன் கூர்மழுங்காத தன்மையினாலேயே சிறப்புப்பெறுபவை