ஸுபாஷிதானி (பாகம்-1) ஸுபாஷிதானி (பாகம்-2) (நன்மொழிகள்) ஆசிரியர்: வேத வித்யாலங்கார நன்னிலம். வை.ராஜகோபால கனபாடிகள் கிடைக்குமிடம்: "வைதிக ஸ்ரீ' புது எண்: 488, பழைய எண்: 175 டி.டி. கே., சாலை, ஆழ்வார் பேட் டை, சென்னை-600018. தொலைபேசி: 91-44- 243612 10. (விலை ஒவ்வொரு பாகமும் தலா ரூ.50)
நமது வேதங்கள், சாஸ்திரங்கள், இலக்கியங்கள் ஆகியவை நல்வாழ்விற்கு வழிகாட்டுபவை. ஸுபாஷிதானி என்றால் நன்மொழிகள். இந்த இரு நூலிலும் மொத்தம் 225 நன்மொழிகள் அதற்கான விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன. வடமொழி சுலோகம், அதை அப்படியே படிக்க வசதியாக தமிழ் வசனம், அதற்கு அடுத்ததாக தமிழ் விளக்கம் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. யாரிடம் கோபம் கூடாது
(பகுதி-2 பக்கம் 30), குழந்தைக்கு எதிரி தாய், தந்தை ( பகுதி-2 பக்கம் 90), கடன் பாக்கி கூடாது (பகுதி-1 பக்கம் 62) போன்ற தகவல்களைப் படித்தால், இப்போது அதிகமாகப் பேசப்படும் "கவுன்சிலிங்' அர்த்தமற்ற மேனாட்டு தாக்கம் என்று புரியும்.
மனிதவள ஆற்றல் பற்றி அறிய விரும்பும் அனைவரும் இக்கருத்துகள் கண்டு வியக்கக் கூடும். ஆனால், விளக்கத்தில் காணப்படும் தமிழ் நடை, சில இடங்களில் இடர்ப்படுகிறது. பல்வேறு நன்முத்துக்களைத் கோர்க்கும் போது, அதற்கான நூலிழையில் பிசிறு இன்றி, இனி பதிப்பாளர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம். இந்த நூலை படிக்கும் போது நமது பாரம்பரியத்தின் மீது மதிப்பு நிச்சயமாக அதிகரிக்கும்.