எண்பதுகளில் தமிழ் இலக்கிய உலகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர்\nஇரா.முருகன். -இன்னும் எழுதமாட்டாரா என ஏங்க வைக்கும் உரைநடை. இன்னும்\nஎதையாவது மிச்சம் வைத்திருக்கிறாரா என்று ஆராயத் தோன்றும் தகவல் - விவரச்\nசேர்க்கைகள். இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தீர்மானம் கொள்ளவைக்கிற மனித மன\nஊடுருவல் வித்தை.\nகணையாழி, தீபம் என்று தொடங்கி, கல்கி, விகடன் வரை அணிவகுத்த முருகனின் சிறு\nகதைகள், அவை வெளியான காலத்தில் வாசகர்கள் மத்தியில் உண்டாக்கிய எதிர்வினைகள்\nவிசேஷமானவை. தேர்ந்த வாசகர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக எப்போதும்\nஅவர் இருந்து வந்திருக்கிறார்.
\nஇரா. முருகன் சிறுகதைகளின் இம்முழுத் தொகுப்பு, நமக்கு அளிக்கும் வாசிப்பு அனு\nபவம் மகத்தானது. எழுத்தில் அவர் மேற்கொண்டிருக்கும் பல்வேறு பரீட்சார்த்த\nமுயற்சிகள், அநேக விதங்களில் தமிழில் முதல் முயற்சி என்று சொல்லப்படக்கூடியவை.\nஎடுத்துக்கொள்ளும் களங்களும் ஆராயப்படும்\nவிஷயங்களும் கூட.
\n51 வயதான இரா. முருகன், இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்புகளையும் இரண்டு நாவல்களையும் வெளியிட்டிருக்கிறார். பெருமைக்குரிய 'கதா' விருது பெற்றவர். இவரது 'அரசூர்\nவம்சம்' நாவல், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசைப் பெற்றது.\n