அதிவீரராம பாண்டியன் பொன்மொழிகள்: பக்கங்கள் 80; வெளியீடு: பிரேமா பிரசுரம், சென்னை- 24;
தமிழ்ப்புலமையும், வடமொழிப் புலமையும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிவீரராம பாண்டியன் தமிழில் வெற்றி வேற்க்கை, திருக்கருவைக் கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி, பதிற்றுப் பத்து அந்தாதியும், வடமொழி நூல்களின் மொழிபெயர்ப்புகளாகிய கூர்ம புராணம், இலிங்க புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, மதனக் கோவை மற்றும் நைடதம் ஆகியவற்றையும் இயற்றி உள்ளார். இவரது நூல்களிலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்ட அழகுமிக்க கருத்து மாலையே இந்நூல்.