அகிலா பதிப்பகம், "அங்கப்பா இல்லம்,' 36, காந்தி நகர், கணபதி, கோவை-641 006. (பக்கம்: 144.)
நல்ல மரபுக் கவிதைகள் இடம் பெற்றுள்ள சிறந்த கவிதைத் தொகுப்பு. தமிழ் மொழியின் சிறப்பு, தமிழர் தம் பெருமை காதல்- என்றெல்லாம் பல பொருட்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ள கவிதைகள் பலரின் கவனத்தைக் கவர வேண்டியவை. ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர் என்பதை சில கவிதைகளில் காண்கிறோம். பேரவையின் சீற்றத்தைக் கண்டு சினந்தெழுந்து எழுதுகையில் (ஆண்டவனா?) கவிஞர் கடவுளையே சபித்து தீர்த்து விட்டார். குழந்தைகளுக்கும் இதில் சில மரபுக் கவிதைகள். உள்ளபடியே இவர் தன்னை கவிஞர் எனக் கூறிக் கொள்ள எல்லாத் தகுதியும் இவருக்கு இருக்கிறது என்பதற்கு இந்தக் கவிதை நூல் கட்டியம் கூறுகிறது.