542. பிருஹத் ஸம்ஹிதை - பாகம்-2 : நூலாசிரியர்: டாக்டர் கே.என்.சரஸ்வதி. வெளியீடு: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 288. விலை: ரூ.150)
ஸ்ரீவராஹமிஹிராசாரியரால் எழுதப்பட்ட பிருஹத் ஸம்ஹிதை என்ற வடமொழி நூலாசிரியர் தமிழில் மொழிபெயர்த்து இரண்டு பாகங்களாக வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர். இது இரண்டாவது பாகம். இயற்கையின் சீற்றங்களினால் (மழை, வெள்ளம், புயல், இடி, மின்னல், வால் நட்சத்திரம்) ஏற்படும் சுற்றுப்புற விளைவுகளை விளக்குகிறது இந்த நூல். இது தவிர வீடு கட்டுதல், வாஸ்து புருஷன், நீரோட்டங்கள், கிணற்று நீரைச் சுத்தம் செய்யும் முறைகள், தோட்டக் கலை, கோவில்கள் நிர்மாணித்தல், சிலைகள் செய்து அவற்றை பிரதிஷ்டை செய்யும் முறைகள், பசுக்கள், எருதுகள், குதிரை, யானை, நாய், சேவல், மனிதர்களின் குணாதிசயங்களை வைத்து அடையாளம் காணல், வைரங்கள், முத்துக்கள், ருத்ராட்சம் ஆகியவை பற்றி ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன இந்த நூலில். (உதாரணம்) ஜம்பு (நாவல் ) மரத்தின் கிழக்கே ஒரு எறும்புப் புற்று இருந்தால், அதன் தென்புறத்தில் 1224 ஆழத்தில் ஒரு நீரோட்டம் இருக்கும். அந்த நீரோட்டம் மிக இனிப்பான நீரைக் கொடுக்கும்.
விஷய தாகம் உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.